சென்னை:
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமாவை பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகும் அண்ணாமலையின் முடிவும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைதளம் மூலம் நேரலையில் மக்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:
* கோவையை மையமாக கொண்டு அப்துல் கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம் செயல்படும்.
* பாஜகவை எதிர்க்க வேண்டிய நிலை வந்தால் உடனடியாக எதிர்ப்போம்.
* பயிற்சி பெற்ற பின்னரே தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்கள் வடிவமைக்கப்படுவர்.
* நாம் மாறினால் மாற்றம் தானாகவே நடக்கும். யார் மீதும் வன்மம் கிடையாது.
* திமுக, அதிமுக, தவெக, நாதக, பாமகவை எப்படி பார்க்கிறேனோ அப்படித்தான் பாஜகவையும் பார்க்கிறேன்.
* பாஜகவை எதிர்க்க வேண்டிய நிலை வந்தால் எதிர்ப்பேன். கைப்பிடித்து இங்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி.
* சமூக வலைதளத்தில் அரசியல் பேசுவோம், அவரவர் வழியில் அரசியல் எல்லோரும் செய்யட்டும்.
* அண்ணாமலை பொதுமக்கள் நேரலையில் சந்திக்கும் நிலையில் அவர் அறிவித்த இயக்கத்தில் உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர்.
* நேரலையில் அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அண்ணாமலை அறிவித்த இயக்கத்தில் உறுப்பினர்கள் வேகமாக சேர்ந்து வருகின்றனர்.
* அண்ணாமலை அறிவித்த We the leader இயக்கத்தில் 1 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இணைந்தனர்.
* www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர்.