மின்வெட்டு பிரச்​சினை​யில் ஒரு சிலரின் தூண்​டு​தலின் பேரில் சாலைகளில் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது – அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் !!

சென்னை:
மின்வெட்டு பிரச்​சினை​யில் ஒரு சிலரின் தூண்​டு​தலின் பேரில் சாலைகளில் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது என்று அமைச்​சர் சி.டி.ஆர்​.நிர்​மல் குமார் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் பசுமை ஆற்​றல் மற்​றும் புதுப்​பிக்​கத்​தக்க எரிசக்​தித் துறை சார்​பாக நடை​பெற்ற 25-வது ஆண்டு கருத்​தரங்​கம் மற்றும் கண்​காட்​சியை மின்துறை அமைச்​சர் நிர்​மல் குமார் தொடங்​கி​வைத்​தார்.

தொடர்ந்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கடந்த 15 முதல் 20 ஆண்​டு​களாக சில துறை​கள் எதிர்​பார்த்த அளவி​லான முன்​னேற்​றம் அடைய​வில்​லை.

ஆனால் அடுத்த 30 ஆண்​டு​கள் இந்த அரசு எதை நோக்கி பயணிக்​கப் போகிறது என்​பது குறித்து பல திட்​டங்​களை வைத்​திருக்​கிறோம்.

மின் துறை​யில் முதலீட்​டாளர்​களுக்கு முழு​மை​யாக ஒத்​துழைப்​பு​களை வழங்கிவரு​கிறோம்.

முதலீட்​டாளர்​கள் எதிர்​பார்க்​கும் விஷ​யங்​களை இந்த அரசு செய்து தரும். மின்​னுற்​பத்தி மட்​டும்​தான் தனி​யாருக்கு செல்​லும். மற்ற அனைத்து கட்​டமைப்​பு​களும் தமிழக மின் வாரி​யத்​திடம் இருக்​கும்.

இரவு எங்​கெல்​லாம் மின்​தடை ஏற்​பட்​டுள்​ளது. எவ்​வளவு நேரத்​தில் சரி செய்​யப்​படு​கிறது என கேட்​டறிந்து வரு​கிறேன். ஒரு சிலர் வேண்​டுமென்றே ஃபியூசை பிடுங்கி மின்​வெட்டை ஏற்​படுத்​துகிறார்​கள்.

அவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சிசிடிவி இருந்​த​தால் ஒரு சிலர் மட்​டும் கைது செய்​யப்​பட்​டிருக்​கிறார்​கள்.

பெரம்​பூரில் 2 தெரு​வில் தொடர்ச்​சி​யாக மின்​வெட்டு ஏற்​படு​கிறது. வேண்​டுமென்றே சிலர் மின்​வெட்டை ஏற்​படுத்​துகிறார்​கள்.

ஒரு சிலரின் தூண்​டு​தலின் பேரில் சாலைகளில் போராட்​டம் நடத்​தப்​படு​கிறது. வேண்​டுமென்று மின் வெட்டு ஏற்​படுத்​தும் நபர்​களைக் கண்​காணித்து அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. பொது​மக்​களும் ஒத்​துழைப்பு கொடுக்க வேண்​டும்.

சிசிடிவி இல்​லாத இடங்​களில் பொது​மக்​கள் சந்​தேகப்படும் நபர்​கள் குறித்து தெரிவிக்க வேண்​டும்.

மின்​னகம் மூல​மாக​வும், சமூக வலைத்​தளங்​கள் மூல​மாக​வும் வரக்​கூடிய புகார்​களுக்கு உடனடி தீர்வு காணப்​படு​கிறது.

மின் துறை​யில் உள்ள அனைத்து பிரிவு​களைச் சேர்ந்​தவர்​களும் ஒருங்கிணைந்து பணி​யாற்றி வரு​கிறார்​கள். இரவு கண்​காணிப்​புப் பணி​யில் அதிக நபர்​கள் உள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *