தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​திடம் லஞ்​சம் பெற்​ற​தாக, முன்​னாள் அமைச்​சர் வைத்தி​லிங்​கத்​துக்கு எதி​ராக பதிவு செய்​யப்​பட்ட வழக்கு முடித்து வைப்பு!!

சென்​னை:
தனி​யார் கட்​டு​மான நிறு​வனத்​திடம் லஞ்​சம் பெற்​ற​தாக, முன்​னாள் அமைச்​சர் வைத்தி​லிங்​கத்​துக்கு எதி​ராக பதிவு செய்​யப்​பட்ட வழக்கை முடித்து ​வைத்​துள்ளதாக நீதி​மன்​றத்தில் லஞ்ச ஒழிப்​புத் துறை, அறிக்கை தாக்​கல் செய்​துள்​ளது.

கடந்த 2011 முதல் 2016 வரையி​லான அதி​முக ஆட்​சிக்​காலத்​தில், வீட்டு வசதித் துறை அமைச்​ச​ராக இருந்த வைத்​தி​யலிங்​கம், சென்னை பெருங்​களத்​தூர் ஸ்ரீராம் ப்ராப்​பர்ட்​டீஸ் அடுக்​கு​மாடி கட்​டிடத்​துக்கு திட்ட அனு​மதி அளிக்க ரூ.28 கோடி லஞ்​சம் பெற்​ற​தாக புகார் எழுந்​தது.

இதுதொடர்​பாக அறப்​போர் இயக்​கம் சார்​பில் 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் புகார் அளிக்​கப்​பட்​டது.

இரண்டு ஆண்​டு​கள் தாமதத்​துக்​குப் பிறகு, இந்த புகாரின் அடிப்​படை​யில், 2024-ம் ஆண்டு செப்​டம்​பரில் லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்கு பதிவு செய்​தது.

சென்னை அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்த இந்த வழக்​கில், வைத்​தி​லிங்​கத்​துக்கு எதி​ரான குற்​றச்​சாட்​டுக்​களுக்கு போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என்​ப​தால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்​புத் துறை சார்​பில் அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த வழக்​கு, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்ற நீதிபதி எஸ்.கார்த்​தி​கேயன் முன்​பு, ஜூன் 12-ம் தேதி விசா​ரணை​க்​கு வரவுள்​ளது.

அன்​று லஞ்​ச ஒழிப்​புத்​ துறை ​தாக்​கல்​ செய்​துள்​ள அறிக்​கை மீது நீ​திப​தி ​முடி​வெடு​ப்​​பார்​ என எ​திர்​​பார்​க்​கப்​படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *