நெல்லை,
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது.
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும்.
கேரிவலில் இந்த ஆண்டு ஆனி திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரதவீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர்.
தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) நடராஜருக்கு திருநடன தீபாராதனை மற்றும் ரத வீதி உலா நடக்கிறது.