என்னை எங்கேயும் தேட வேண்டாம்; சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன்!! விஜய்யின் குட்டி கதைக்கு மு.க.ஸ்டாலின் பதில்….

திருவாரூர்:
தமிழக சட்டப்பேரவையில் விஜய் சொன்ன ‘அப்பாவைக் காணோம்’ குட்டிக் கதை கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், “என்னை எங்கேயும் தேட வேண்டாம்;

நான் மக்கள் மனதில் இருக்கிறேன்,” என திமுக தலைவர் மு. க ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

பின்னர் விழாவில் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை, டெல்டா மாவட்டத்தில் குறித்த நேரத்தில் விவசாயி களுக்கு மேட்டூர் அணை தண்ணீர் திறக்க முடியவில்லை போன்ற பிரச்சினைகள் உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்துள்ளோம். இவற்றை யெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் எடுத்துச் சொல்லிப் பேசினார்.

ஆனால் முதல்வராக உள்ளவர் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், “எங்கே உங்கள் அப்பாவை காணோம்!” என்கிறார்.

அப்பாவை அங்கே தேடாதீர்கள். அவர் மக்கள் மனதில் பதிந்திருக் கிறார். சட்டப்பேரவையில் நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்திலே நான் இருக்கிறேன் என்பதை உங்களிடத்தில் கூறிக் கொள்கிறேன்.

கடந்த 60 வருடங்களாக மக்களோடு மக்களாகத் தான் பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வராக இருந்தபோது, சென்றிருக்கிறேன்.

நான் ஆய்வுக் கூட்டம் நடத்தியதைப் போல யாரும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி இருக்க மாட்டார்கள். கோட்டையில்தான் கோப்புகள் உள்ளன அந்த கோப்புகளை எடுத்துப் பாருங்கள்,

மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களில் எல்லாம் நான் கையெழுத்துள்ளேன் அங்கெல்லாம் நான் இருக்கிறேன்.

என்னை தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மக்களோடு தான் இருக்கிறேன். அண்ணா தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தது ஒன்றே போதும், இந்த தமிழ்நாடு உள்ளவரை நான் தான் முதல்வர் என்று சொன்னதைப் போல, மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின்தான் முதல்வர், கருணாநிதி கூட்டணி அமைத்தால் கூட்டணி கட்சியை பாதுகாப்பாக வைத்திருப்பார், அவர்களாகத்தான் கூட்டணியை விட்டு போவார்களே தவிர, வெளியேற்ற மாட்டார்.

அந்த வழியில்தான் நான் கூட்டணியை பாதுகாத்தேன். ஆனால் கூட்டணியே வேண்டாம் எனவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதனையும் பரிசீலிப்போம்,” என்றார்.

இந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *