எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ஆளும் கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள்; இதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்! ஸ்டாலின்….

சென்னை:
“ஆளும் கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள்.

இதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்!” என்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடந்து வரும் நிலையில் ஸ்டாலின் இவ்வாறாக எதிர்வினையாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்: ”திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவின் வீட்டில் தமிழக அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது.

அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டு களை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.

ஆளும் கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்கு முறைகளையே பார்த்தவர்கள் நாங்கள்.

இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *