தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகங்​கள் புகார் கொடுக்​கலாம் – சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு!!

சென்னை:
தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்​றுத் தரு​வ​தாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் பாதிக்​கப்​பட்ட பள்ளி நிர்​வாகங்​கள் புகார் கொடுக்​கலாம் என்று காவல் ஆணை​யர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

தமிழகத்​தில் தனி​யார் பள்​ளி​களுக்கு அங்​கீ​காரம் பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக பி.டி.அரசகுமார் பேரில் சென்னை தியாக​ராய நகரில் செயல்​படும் தனி​யார் பள்ளி சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஒரு புகார் கொடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர்.

புகாருக்கு உள்​ளான திமுக செய்​தித் தொடர்​புக் குழு துணைத் தலை​வ​ரான பி.டி.அரசகு​மாரை கடந்த 27-ம் தேதி கைது செய்தனர்.

இவரது பின்​னணி​யில் முன்​னாள் எம்​எல்ஏ உட்பட மேலும் சிலர் இருப்​ப​தாக​வும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. முன்னாள் எம்எல்ஏவை போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்​நிலை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வெளி​யிட்ட அறிவிப்பு: ​

தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​யின் தர உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி போன்​றவற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை பணம் வசூலிக்​கப்​பட்​ட​தாக தெரி​கிறது.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​கள் குறித்​தும், சாட்​சி​யங்​களை சேகரித்​தும் புலன் விசா​ரணை நடக்​கிறது.

இந்த மோசடி​யால் பாதிக்​கப்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகத்​தினர் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் அல்​லது அங்கு செயல்​படும் சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு காவல் துறையை அணுகலாம்.

புகார் கொடுப்​பவர்​கள் குறித்த தகவல் ரகசி​ய​மாக வைக்​கப்​பட்​டு, குற்​ற​வாளி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *