எனது ஓய்வு முடிவு இப்போது முக்கியம் அல்ல என்று கருது கிறேன்!! கிறிஸ்டியானோ ரொனால்டோ…

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓய்வு பெறுவார் என அவரது சகோதரி கூறியிருந்தார். இந்நிலையில், அது குறித்து ரொனால்டோ தெளிவுப்படுத்தி உள்ளார்.

இந்த தொடரில் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு போர்ச்சுகல் அணி முன்னேறியுள்ளது. குரோஷியா அணிக்கு எதிரான ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ மற்றும் ராமோஸ் அந்த அணிக்காக கோல் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆட்டத்துக்கு பிறகு ஓய்வு குறித்து ரொனால்டோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளித்தார். “எனது ஓய்வு முடிவு இப்போது முக்கியம் அல்ல என்று கருதுகிறேன்.

இந்த தொடரில் வெற்றி அல்லது தோல்வி என எதுவாக இருந்தாலும் ஓய்வு குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது என நினைக்கிறேன்.

அது குறித்து எனது குடும்பத்துடன் பேசுவேன். அதன் பின்னர் அது குறித்து சரியான முடிவு எடுப்பேன்.

தருணத்தின் அடிப்படையில் நான் முடிவு எடுப்பது இல்லை. இப்போது எனது முடிவுகளை மிகவும் அமைதியாக எடுக்கிறேன். இப்போது எனது ஆட்டத்தை அனுபவித்து விளையாடுவதும், அணிக்கு உதவுவதும் முக்கியம் என கருதுகிறேன்.

உலகக் கோப்பை தொடரின் முதல் வாரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற எண்ணம் வந்தது.

அதை கடந்து வந்தேன். கடின உழைப்பை செலுத்தினேன். இப்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *