முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெயர் பொறித்த கல்​வெட்டை இன்​னும் ஒரு வாரத்​துக்​குள் சீரமைத்​துத் தரவில்லை என்​றால் திமுக சார்​பில் ,மிகப்​பெரிய போராட்​டம் நடை​பெறும் – தா.மோ.அன்பரசன் எச்சரிக்கை!!

சென்னை: ​
முன்​னாள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பெயர் பொறித்த கல்​வெட்டை இன்​னும் ஒரு வாரத்​துக்​குள் சீரமைத்​துத் தரவில்லை என்​றால் திமுக சார்​பில் ,மிகப்​பெரிய போராட்​டம் நடை​பெறும் என, திமுக முன்​னாள் அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் எச்​சரித்​துள்​ளார்.

இதுகுறித்து, அவர் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த திமுக ஆட்​சி​யில் ரூ.1516.82 கோடி மதிப்​பீட்​டில், நெம்மேலி​யில் நாள் ஒன்​றுக்கு 150 மில்​லியன் லிட்​டர் கடல்​நீரைக் குடிநீ​ராக்​கும் இரண்​டாவது திட்​டத்தை அப்​போதைய முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

தென்சென்னை மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த சுமார் 20 லட்​சம் மக்​களுக்கு தண்​ணீர் வழங்​கும் இத்​திட்​டத்தை குறிக்​கும் வகை​யில் வைக்​கப்​பட்​டிருந்த மு.க.ஸ்​டா​லினின் பெயர் பொறித்த கல்​வெட்​டை, தற்​போதைய தவெக அரசு சிதைத்து அகற்​றி​யுள்​ளது.

இதுகுறித்து, அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ஒரு வாரத்​தில் சரி செய்​வ​தாக உறு​தி​யளித்​துள்​ளனர்.

அகற்​றப்​பட்ட கல்​வெட்டை இன்​னும் ஒருவார காலத்​துக்​குள் மீண்​டும் அதே இடத்​தில் சீரமைத்து வைக்​க​வில்லை என்​றால், திமுக சார்​பில் மிகப்​பெரிய போராட்​டம் நடத்​தப்​படும்.

தவெக அரசு பதவிக்கு வந்த பிறகு ஒரு புதிய திட்​டத்​தைக் கூடச் செயல்​படுத்​த​வில்​லை.

டிஎன்​பிஎஸ்சி மூல​மாக 401 பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் திட்​டம், பத்​திரப்​ப​திவுத் துறை​யின் ‘ஸ்​டார் 3.0’ திட்​டம் போன்​றவை திமுக ஆட்​சி​யில் உரு​வாக்​கப்​பட்​ட​வை.

தற்​போதைய அரசு வெறும் பணி நியமன ஆணையை மட்​டுமே வழங்​கி​யுள்​ளது.

நான் முதல்​வன்' திட்​டத்​தின் பெயரைதிறன் மேம்​பாடு’ எனப் பெயர் மாற்​றி​யுள்​ளனர்.

மேலும், பயனடைந்த மாணவர்​களின் வீடியோ பதிவு​களை இணை​யத்​திலிருந்து நீக்​கி​யுள்​ளனர்.

செய்தி மக்​கள் தொடர்​புத் துறையை தவெக​வின் ஐடி விங் போலப் பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

முதல்​வர் விஜய் ஸ்டிக்​கர் ஒட்​டும் வேலை​யை​யும், கல்வெட்டுகளை நீக்​கும் வேலை​யை​யும் விடுத்​து, புதிய திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்த வேண்​டும்.

தவெக எம்​எல்ஏ சரவணன் தன் மீது சுமத்​தப்​பட்ட பாலியல் புகாரை திசை திருப்​புவதற்​காக, தன்​னிடம் ரூ.50 கோடி பேரம் பேசப்​பட்​ட​தாக ஆடியோ வெளி​யிட்டு நாடக​மாடு​கிறார்.

பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்​குப் பதில் சொல்​லாமல், தங்​களது ஆலோ​சகர்​கள் எழு​திக் கொடுக்​கும் திரைக்​கதையை வைத்து எம்​எல்​ஏக்​கள் நடிக்​கிறார்​கள். பாலியல் குற்​றங்​களுக்கு எதி​ராக திமுக தொடர்ந்து போராடி வரு​கிறது.

தற்​போதைய முதல்​வரின் செயல்​பாடு​களை 6 மாதங்​களுக்கு வேடிக்கை பார்ப்​போம். அதன் பிறகு பொது​மக்​களே தெரு​வில் இறங்​கிப் போ​ராடும்​ சூழல்​ உரு​வாகும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *