தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார்!! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை:
தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலையில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

நாகர்கோவில் சிறைக்​குள் சபரிவர்​மன் என்ற விசாரணைக் கைதி அடித்து கொல்​லப்​பட்டதாக எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் தூத்துக் குடியில் அருணாச்​சலம் எனும் விசா​ரணை சிறை​வாசி காவல்​ நிலை​யத்​தில் வைத்து அடித்து கொல்​லப்​பட்ட சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடரும் நிலை யில் முதல்வர் விஜய் எப்போது இது குறித்து மவுனம் கலைப்பார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் “எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதல்வரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? Accountability, Apology முதல்வருக்கு பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக தவெக அரசுக்கு வன்மையான கண்ட னங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு.வீர​பாண்​டியன், “கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் மாற்​றுத் திற​னாளி ஒரு​வர், காவல் துறை​யின​ரால் அடித்து கொல்​லப்​பட்ட அதிர்​வலைகள் அடங்​காத நிலை​யில், தூத்​துக்​குடி போலீ​ஸா​ரால் விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அருணாசலம் என்ற இளைஞரின் காவல் மரணம் நிகழ்ந்​திருப்​பது வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது.

சாத்​தான்​குளத்​தில் காவல்​ துறை​யின​ரால் தந்​தை​யும், மகனும் கொல்​லப்​பட்ட வழக்​கின் தீர்ப்பு காவல்​துறை​யின் மனப்​போக்​கிலும், நடை​முறை​யிலும் எந்த தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​த​வில்லை என்​ப​தையே கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி சம்​பவங்​கள் வெளிப்​படுத்​துகின்​றன.

காவல் மரணங்​களை முற்​றி​லு​மாக தடுக்​கும் வகை​யில் காவல்​துறை நிர்​வாகத்தை சீரமைக்க முதல்​வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.” எனக் கூறியிருந்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமான், “சபரிவர்​மன் எனும் சிறை​வாசி அடித்து கொல்​லப்​பட்ட சுவடுமறைவதற்​குள் அருணாச்​சலம் எனும் விசா​ரணை சிறை​வாசி காவல்​நிலை​யத்​தில் வைத்து அடித்து கொல்​லப்​பட்​டிருப்​பது மாநில அரசின் நிர்​வாகத் தோல்​வியையே காட்​டு​கிறது.

மூன்று மாதத்​தைக்​கூட நிறைவுசெய்​யாத தவெக ஆட்சியில் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்​துள்​ளன.

எப்​பேர்ப்​பட்ட குற்​ற​வாளி​யாக இருந்​தா​லும் அரி​தான வழக்​கு​களுக்கே மரண தண்​டனை வழங்​கப்​படு​கிறது.

எந்த குற்​றமிழைத்​தவ​ரா​யினும் அவருக்​கான தண்​டனையை நீதி​மன்​றத்​தின் மூலமே பெற்​றுதர வேண்​டும்.

காவல்​துறை எதேச்​ச​தி​காரப் போக்​கோடு குற்​றம்​ சாட்​டப்​பட்​ட​வரின் மீது தாக்​குதல் நடத்​து​வதை ஒரு​நாளும் ஏற்க முடி​யாது.

காவல்​நிலை​யத்​தில் படு​கொலை செய்​யப்​பட்ட அருணாச்​சலம் மரணத்தை கொலை வழக்​காகப் பதிவுசெய்​து, அதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை விரைந்து கைது செய்ய வேண்​டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *