இன்றைய ராசிபலன்…!!

மேஷம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதியவர்கள் அறிமுகமாவர்.

ரிஷபம்

கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும் நாள். புதிய உத்தியோகத்திற்காக எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் நடைபெறும்.

மிதுனம்

யோகமான நாள். அதிகாலையிலேயே வரவு வந்து சேரும். தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்

தகராறு செய்தவர்கள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும்.

சிம்மம்

எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.

கன்னி

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

துலாம்

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

விருச்சிகம்

சேமிப்பு உயரும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தனுசு

பக்கத்தில் உள்ளவர்களால் சிக்கல்கள் ஏற்படும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொல்லை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மகரம்

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

கும்பம்

ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் அயல்நாட்டு அழைப்புகள் வரலாம்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *