தனுஷ் நடித்து வரும் ‘ஓம்’ படத்தில் ‘பர்மா கார்த்திக் கேயன்’ என்ற சர்வதேச கடத்தல்காரர் கதாபாத்தி ரத்தில் மம்முட்டி!!

சென்னை:
தனுஷ் நடித்து வரும் ‘ஓம்’ படத்தில் ‘பர்மா கார்த்திக்கேயன்’ என்ற சர்வதேச கடத்தல்காரர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் மம்முட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஓம்’ படத்தில் அவரின் கதாபாத்திரத்தை விளக்கும் விதமாக ‘சியா என்ட்ரி’ என்ற டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஒண்​டர்​பார் பிலிம்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இது பர்மா கார்த்திக்கேயனை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் நேரம். ‘ஓம்’-லிருந்து சியா என்ட்ரி. தி ஒன் அண்ட் ஒன்லி மம்முட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நிமிடம் ஓடும் இந்த சியா என்ட்ரி டீசர் வீடியோவில், மம்முட்டி சர்வதேச கடத்தல்காரராக காட்டப்படுகிறார்.

காவல் துறை அவரைத் தேடிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு நம்மை செய்யும் கடத்தல்காரனாக அறியப்படும் அவர் சியா என்று அழைக்கப்படுகிறார்.

கார்த்திக்கேயன் செம்பு கலந்த தங்கமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் எனச் சொல்லி அரசியலுக்குள்ளும் நுழைகிறார்.

மம்முட்டி, 2019-ம் ஆண்டு ராமின் இயக்கத்தில் வெளியான ‘பேரன்பு’ படத்தில் நடித்திருந்தார். ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘ஓம்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

இந்தப் படத்தின் மம்முட்டி, தனுஷ் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கின்றனர்.

முன்னதாக, மம்முட்டியின் ‘ப்ரோப்ரேட்டர்: கம்மத் அண்ட் கம்மத்’ என்ற படத்தில் தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள தனுஷின் 55-வது படமான ‘ஓம்: சாப்டர் 1’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். எழிலரசு ஒளிப்​ப​திவு செய்கிறார்.

படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், தனுஷ், மம்முட்டியுடன் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *