பாட்மிண்டனில் தமிழகத்துக்கு 2 தங்கம்!!

க​ன​டா​வின் ஆன்​டாரியோ நகரில் உலக ஸ்கு​வாஷ் ஜூனியர் தனி​நபர் சாம்​பியன்​ஷிப் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் பிரிவு கால் இறுதி சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 20-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் அனஹத் சிங், எகிப்​தின் ஹபிபா ரிஸ்க்​குடன் மோதி​னார்.

இந்த மோதலில் அனஹத் சிங் 11-7, 11-5, 6-11, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

அகில இந்​திய சீனியர் ரேங்​கிங் பாட்​மிண்​டன் தொடர் சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் நடை​பெற்​றது.

இதில் கலப்பு இரட்​டையர் பிரி​வில் தமிழ்​நாட்​டின் ஷ்ரேயா பாலாஜி, விமல்​ராஜ் அண்​ணாதுரை ஜோடி தங்​கப் பதக்​கம் வென்​றது.

மகளிர் இரட்​டையரில் நயனா ஓயாஸிஸ் (கேரளம்) – வி.எஸ்​.வர்​ஷினி (தமிழ்​நாடு) தங்​கம் வென்​றனர்.ஆடவர் இரட்​டையர் பிரி​வில் மகா​ராஷ்டி​ரா​வின் விப்​லவ் குவாலே-​வி​ராஜ் குவாலே ஜோடி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் உத்​த​ராகண்​டின் துருவ் நேகி​யும், மகளிர் ஒற்​றையர் பிரி​வில் ஹரியாணா​வின் ஜியா ரவாத்​தும் தங்​கம் வென்​றனர்.

வெள்ளிப் பதக்கம் வென்றார் சன்யம்

சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சன்யம் 243.4 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சீனாவின் ஷியாங் ஷாங்கி 243.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஈரானின் ஹனியே ரோஸ்டமியான் 221.0 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

கால் இறுதிக்கு முன்னேறினார் ராதிகா

பிஎஸ்ஏ சாலஞ்​சர் ஸ்கு​வாஷ் தொடர் சிங்​கப்​பூரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவருக்​கான 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ரவி​கு​மார் 12-10, 11-5, 3-11, 11-7 என்ற செட் கணக்​கில்​ஜப்​பானின் ஷோட யசுன்​யை​யும், ஓம் செம்​வால் 11-9, 4-11, 4-11, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சிங்​கப்​பூரின் ஆரோன் லியாங்​கை​யும் வீழ்த்தி கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

மகளிர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ராதிகா சீலன் 8-11, 11-9, 11-2, 7-11, 12-10 என்ற செட் கணக்கில் சிங்​கப்​பூரின் வாய் லின் ஆ யோங்கை வீழ்த்தி கால் இறுதி சுற்​றில் கால் பதித்​தார்​.

கால் இறுதியில் நேரடியாக இந்தியா, பாக். அணிகள்

ஆசிய விளை​யாட்டு போட்டி வரும் செப்​டம்​பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்​பானின் உள்ள ஐச்சி நகோ​யா​வில் நடை​பெறுகிறது.

இதில் கிரிக்​கெட் விளை​யாட்​டுக்​கான அட்​ட​வணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. ஆடவர், மகளிர் என இரு பிரி​விலும் இந்தியா, பாகிஸ்​தான் அணி​கள் கால் இறுதி சுற்​றில் நேரடி​யாக நுழைந்​துள்​ளன.

ஆடவர் பிரி​வில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி​யுடன் பாகிஸ்​தான், இலங்கை வங்​கதேசம் ஆகிய அணிகளும் கால் இறுதி சுற்​றுக்கு நேரடி​யாக நுழைந்​துள்​ளன. மீதம் உள்ள 4 அணி​கள் லீக் சுற்​றில் இருந்து முன்​னேறும்.

மகளிர் பிரி​வில் இந்​திய அணி கால் இறுதி சுற்​றில் ஜப்​பானுடன் மோதுகிறது.

அரை இறுதி சுற்​றில் இந்​திய மகளிர் அணி வங்கதேசம் அல்​லது சீனா​வுடன் மோதக்​கூடும். மகளிர் பிரிவு ஆட்டங்கள் செப்​டம்​பர் 17 முதல் 22 வரை நடை​பெறுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *