உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்​கப்​பல், சுய​சார்பு இந்​தி​யா​வின் அடையாளமாக விளங்​கு​கிறது!! பிரதமர் மோடி பெருமிதம்….

புதுடெல்லி:
உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்​கப்​பல், சுய​சார்பு இந்​தி​யா​வின் அடையாளமாக விளங்​கு​கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

மாதத்​தின் கடைசி ஞாயிற்​றுக்​கிழமை “மன​தின் குரல்” வானொலி நிகழ்ச்சி வாயி​லாக நாட்டு மக்​களு​டன் பிரதமர் மோடி உரை​யாற்றி வரு​கிறார். இதன்​படி 136-வது “மன​தின் குரல்” நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

இதில் பிரதமர் நரேந்​திர மோடி கூறி​யிருப்​ப​தாவது: கார்​கில் போரின் வெற்றி விழாவை இன்று (ஜூலை 26) கொண்​டாடு​கிறோம்.

கார்​கி​லின் உயர​மான சிகரங்​கள், கடும் குளிர், எதிரி​களின் சவால்​களை நமது ராணுவ வீரர்​கள் தீரத்​துடன் எதிர்​கொண்​டனர். இந்த நேரத்​தில் கார்​கில் போரில் உயிர்த்​தி​யாகம் செய்த வீரர்​களை நினை​வு​கூர்ந்து தலை​வணங்​கு​கிறேன்.

இந்​திய கடற்​படை​யில் அண்​மை​யில் ஐஎன்​எஸ் மகேந்​திரகிரி போர்க்​கப்​பல் இணைக்​கப்​பட்​டது. உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட இந்த போர்க்​கப்​பல் சுய​சார்பு இந்​தி​யா​வின் அடை​யாள​மாக விளங்​கு​கிறது.

அண்​மை​யில் இந்​தோ​னேசி​யா​வில் பயணம் மேற்​கொண்​டேன். அப்​போது பிரம்​மோஸ் ஏவு​கணை​களை ஏற்​றுமதி செய்ய இந்​தி​யா, இந்​தோ​னேசியா இடையே முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. ஆயுத உற்​பத்​தி, ஏற்​றும​தி​யில் இந்​தியா புதிய சிகரங்​களை தொட்டு வரு​கிறது.

மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் ஏற்​கெனவே மழைநீர் சேகரிப்பு இயக்​கம் பற்றி பேசினேன். தற்​போதைய பரு​வ​மழை​யின்​போது ஒவ்​வொரு சொட்டு நீரை​யும் சேமிக்க வேண்​டும். மழைநீர் சேகரிப்பை மிகப்​பெரிய இயக்​க​மாக மாற்ற வேண்​டும்.

சில நாட்​களுக்கு முன்​பாக கிளாஸ்​கோ​வில் காமன்​வெல்த் போட்​டிகள் தொடங்​கின. இந்த போட்​டி​யில் நமது வீரர்​கள் பல்​வேறு சாதனை​களை படைத்து வரு​கின்​றனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

“ஜூலை 27-ம் தேதி முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமின் நினைவு நாள் ஆகும். அவர் பன்​முகத்​தன்மை கொண்​ட​வர்.

எனினும் அவருடைய இதயத்​துக்கு மிக​வும் நெருக்​க​மானது ஆசிரியர் பணி. ஒவ்​வொரு​வரும் மிகப் பெரிய கனவு காண வேண்​டும் என்று சிறார், இளைஞர்​களை அவர் ஊக்​கப்​படுத்​தி​னார்.

இந்த நேரத்​தில் அவருக்கு மரி​யாதை செலுத்​துகிறேன்” என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர் மோடி பேசும்​போது, “சுதந்​திர தினத்தை ஒட்டி கடந்த சில ஆண்டுகளாக வீடுதோறும் தேசி​யக்கொடி யேற்​றும் இயக்​கத்தை நடத்தி வரு​கிறோம்.

வரும் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். இந்தாண்​டும் வீடு​தோறும் தேசி​யக் கொடியை பறக்க​விட வேண்டுகிறேன்.

சுதந்திர தினத்​தையொட்டி ஏராள​மானோர் புதிய சிந்​தனை​களை எனக்கு வழங்​குவது வழக்கம். இந்த ஆண்​டும் உங்​களது கருத்​துகளை mygov இணை​யத்​தில் பதிவு செய்ய வேண்​டு​கிறேன்​” என்​றார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *