மண்டாடி- திரை விமர்சனம்!!

சென்னை:
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் போட்டி விமரிசையாக நடைபெற்று வருகிறது.


சத்யராஜின் சிஷ்யன்களாக சூரியும், சுகாசும் பயிற்சி பெறுகிறார்கள். இதற்கிடையில் சில பிரச்சனைகள் காரணமாக இராமநாதபுரத்தை விட்டு சென்னைக்கு வரும் சூரி சென்னையிலேயே தங்கி வேலை பார்க்கிறார். சொந்த ஊரை மறந்து ஒரு வாழ்க்கை வாழ்கிறார்.

இதற்கிடையில் தனது முன்னாள் காதலியின் மகனை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார் சூரி.

அப்போது எதிர்பாராத விதமாக தான் கைவிட்ட பாய்மர படகு போட்டியில் மீண்டும் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு சூரியும், சுகாசும் பாய்மர போட்டியில் மோதுகிறார்கள். நண்பர்களாக இருந்த இருவரும் பாய்மர படகு போட்டியில் மோதுவது ஏன்?

இறுதியில் யார் வென்றது? எந்த பாய்மரகு போட்டி வேண்டாம் என்று சொன்னாரோ, அதே பாய்மர படகு போட்டியை மீண்டும் சூரி கையில் எடுக்க என்ன காரணம்?

போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை.

சூரி ஒன் மேன் ஆர்மியாக ஜொலித்துள்ளார். படம் முழுக்க சாகசம் புரிந்து ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறார்.

குறிப்பாக கடலில் நடக்கும் பாய்மர படகு போட்டியும் அதற்காக சூரி மேற்கொள்ளும் பயிற்சிகளும் சிலிர்ப்பு.

தெலுங்கு நடிகராக இருந்தாலும் சுகாஸ் தமிழில் மொழியை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

சத்யராஜின் அனுபவ நடிப்பு கை கொடுத்து இருக்கிறது. பால சரவணன் ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் கச்சிதமான தேர்வு.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத ஒரு கதைக்களத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளடக்கிய காட்சிகளை அடக்கி கவனிக்க வைத்துள்ளார் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி. கிளைமாக்ஸ் காட்சி பரபரப்பு உச்சம்.

நேர்த்தியான திரைக்கதை புதுமையான காட்சிகள் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. பிளாஷ்பேக் காட்சிகள் சற்று சலிப்பை உண்டாக்குகிறது.

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல்.

ஜிவி பிரகாஷின் இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *