‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் ஆட இருப்பதாக தகவல்கள்!!

சென்னை:
நடிகைகள் ஸ்ருதி ஹாசன், சமந்தா மற்றும் ஸ்ரீலீலாவைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சமீபகாலமாக முன்னணி கதாநாயகிகள் சிறப்பு பாடல்களுக்கு ஆடுவது டிரெண்டாக மாறி வருகிறது. முன்னணி கதாநாயகர்களின் படங்களில், முன்னணி கதாநாயகிகள் சிறப்புப் பாடல்களுக்கு ஆடுவதால், அந்தப் பாடல்கள் மற்றும் படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இதனால் சிறப்பு பாடலில் ஆடுவதற்கு நடிகைகள் தயங்குவதில்லை. ஏற்கெனவே, முன்னணி கதாநாயகிகளான சமந்தா, காஜல், தமன்னா, ஸ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா ஆகியோர் வெவ்வேறு படங்களில் சிறப்பு பாடலுக்கு ஆடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளனர்.

அந்த வகையில், முன்னணி நடிகையும், சமீப காலமாக க்ளாமராகவும் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்பு பாடலுக்கு ஆட இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

‘தசரா’ படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘தி பாரடைஸ்’. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 7 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது.

செப்டம்பர் மாதம் 23-ந்தேதி ‘தி பாரடைஸ்’ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசைய மைப்பாளரான அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் காம்போவில் வெளியான ‘நேனு லோக்கல்’, ‘தசரா’ ஆகிய படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தவை.

நிஜ வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் நடத்திய பேச்சுவார்த் தைக்குப் பிறகு, இந்த சிறப்புப் பாடலில் ஆட கீர்த்தி சுரேஷ் உடனே சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபகாலமாக கிளாமரான கதாபாத்திரங்களிலும் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ், அனிருத்தின் எனர்ஜிடிக் இசையில் முதன் முறையாக ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடவிருப்பது ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஆவலில் ஆழ்த்தியுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *