சசிகு​மார் நடித்​துள்ள சஸ்​பென்ஸ் த்ரில்​லர் வெப்​ சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்​டரி ஆஃப் மணி’ ஆக.7-ல் வெளி​யாகும் !!

சென்னை:
சசிகு​மார் நடித்​துள்ள சஸ்​பென்ஸ் த்ரில்​லர் வெப்​ சீரிஸான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்​டரி ஆஃப் மணி’ ஆக.7-ல் வெளி​யாகும் என்று பிரைம் வீடியோ அறி​வித்​துள்​ளது.

ஆண்ட்ரூ லூயிஸ் எழு​தி, இயக்​கி​யுள்ள 8 எபிசோடு​கள் கொண்ட இந்த வெப்​-சீரிஸில் சசிகு​மார், மூசா ரஸா என்ற நேர்​மை​யான போலீஸ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார்.

அவருடன் யஷ்வந்த், அனகா மருதோ​ரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்​னா, ரேவதி சர்மா, அர்​ஜுன் நந்​தகு​மார் ஆகியோர் முக்​கிய கதாபாத்திரங்களில் நடித்​துள்​ளனர்.

மதுரை பின்​னணி​யில் உரு​வான இத்​தொடர் பற்றி இதன் கிரியேட்டிவ் தயாரிப்​பாளர்​களான புஷ்கர் – காயத்ரி கூறும்போது, “இயக்​குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்​தக் கதையை மீண்டும் சிறப்​பாக உயிர்ப்​பித்​துள்​ளார்.

சசிகு​மார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் கதைக்கு மிகுந்த ஆழத்தை அளிக்​கும் வகை​யில் அசா​தா​ரண​மான நடிப்பை வழங்​கி​யுள்​ளனர்.

கலாச்சார வேர்​களைக் கொண்ட கதைகளுக்​குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிரைம் வீடியோவுக்கு நன்றி” என்று தெரிவித்​தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *