மெப்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.443.11 கோடி மதிப்​பிலான 11 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல்!!

சென்னை:
தாம்பரம் மெப்ஸ் சிறப்​புப் பொருளா​தார மண்​டலத்​தின் யூனிட் ஒப்​புதல் குழு கூட்​டம் மண்டல மேம்​பாட்டு ஆணை​யர் அலெக்ஸ் பால் மேனன் தலை​மை​யில் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், ரூ.443.11 கோடி மதிப்​பிலான 11 புதிய தொழில் முதலீட்டு திட்​டங்​களுக்கு ஒப்​புதல் வழங்​கப்​பட்​டுள்​ளது.

9 புதிய சிறப்பு பொருளா​தார மண்டல நிறு​வனங்​களும், 2 ஏற்​றுமதி சார்ந்த நிறு​வனங்​களும்​அடங்​கும்.

இந்த புதிய முதலீடு​கள் மூலம் சென்​னை​யின் புறநகர் பகு​தி​களில் பொருளா​தார வளர்ச்சி மேலும் வேகமெடுக்​கும்.

இந்த 11 புதிய திட்​டங்​கள் மூலம் பல்​வேறு தொழில் துறை​களில் மொத்​தம் 2,427 புதிய நேரடி வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​பட​வுள்​ளன.

இந்த முதலீடு​கள் உற்​பத்​தி, தகவல் தொழில்​நுட்​பம், தளவாட சேவை​கள் ஆகிய துறை​களில் மேற்​கொள்​ளப்​பட​வுள்​ளன.

இந்த முதலீட்டு திட்​டங்​கள் சென்​னை​யின் தொழில் உள்​கட்​டமைப்பை வலுப்​படுத்​து​வதுடன், இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை​யும்​ அளிக்​கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *