சென்னை ;
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் 21 திமுக வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 21 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து 21 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 11 புதியவர்களுக்கும், 3 பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு
1. வடசென்னை – கலாநிதி வீராசாமி
2. தென்சென்னை – த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன்
3. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
4. காஞ்சிபுரம் – ஜி.செல்வம்
5. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
6. அரக்கோணம் – எஸ்.ஜெகத்ரட்சகன்
7. வேலூர் – டி.எம்.கதிர் ஆனந்த்
8. தருமபுரி – ஆ.மணி
9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
10. ஆரணி – எம்.எஸ்.தரணிவேந்தன்
11. கள்ளக்குறிச்சி – கே.மலையரசன்
12. சேலம் – டி.எம்.செல்வகணபதி
13. ஈரோடு – கே.இ.பிரகாஷ்
14. நீலகிரி – ஆ.ராசா
15. கோவை – கணபதி ராஜ்குமார்
16. பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி
17. பெரம்பலூர் – அருண் நேரு
18. தஞ்சாவூர் ச.முரசொலி
19. தேனி – தங்கத்தமிழ்ச்செல்வன்
20. தூத்துக்குடி – கனிமொழி
21. தென்காசி – ராணி