விவ​சா​யிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்​பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்​தில் வழங்​கப்​படும்; கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் அறிவிப்பு!!

சென்னை:
“மகளிரை தொழில்​முனை​வோ​ராக்க ரூ.7,015 கோடி​யில் ‘சிங்​கப்​பெண்​கள் கடன் திட்​டம்’ செயல்​படுத்​தப்​படும்” என கூட்​டுறவுத்​துறை அமைச்​சர் காந்​தி​ராஜ் அறி​வித்​தார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று உணவு மற்​றும் நுகர்​வோர் பாது​காப்​புத்​ துறை, கூட்​டுறவுத்​துறை மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதம் நடந்​தது.

அப்​போது கூட்​டுறவுத்​ துறை தொடர்​பாக பதிலளித்த அமைச்​சர் வ.காந்​தி​ராஜ் 39 புதிய அறி​விப்​பு​களை வெளி​யிட்டு பேசி​ய​தாவது:

மகளிரைத் தொழில்​முனை​வோ​ராக்க புதி​தாக ‘சிங்​கப்​பெண்​கள் கடன் திட்​டம்’ ரூ.7,015 கோடி​யில் கூட்​டுறவு நிறு​வனங்​களால் செயல்​படுத்​தப்​படும்.

ஊரகத் தொழில் கடன்

விவ​சா​யிகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மதிப்​பில் ஊரகத் தொழில் கடன் 9 சதவீத வட்டி விகிதத்​தில் வழங்​கப்​படும். கூட்​டுறவு நிறு​வனங்​களால் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களின் தரத்தை மேம்​படுத்​தி, சந்​தைப் பங்கை அதி​கரித்​து, லாபத்தை உயர்த்த ‘வெற்​றி’ என்ற பொது​வான வணி​கச் சின்​னம் அறி​முகப்​படுத்​தப்​படும்.

ரூ.6.90 கோடி மதிப்​பீட்​டில் 3,452 தொடக்க வேளாண்​மைக் கூட்​டுறவுக் கடன் சங்​கங்​களில் நுண் தானி​யங்கி சாதனங்​கள் நிறு​வப்​படும்.

விவ​சா​யிகள் விளைபொருட்​களை சந்​தைப்​படுத்த ரூ.50 கோடி மதிப்​பீட்​டில் பண்​ணைக் கொள்​முதல் முறை அறி​முகப்​படுத்​தப்​படும்.

வேளாண் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு விற்​பனை சங்​கங்​கள் மூலம் மஞ்​சள், முருங்கை மற்​றும் மிளகு ஆகிய விளை பொருட்​கள் ரூ.5 கோடி மதிப்​பீட்​டில் ஏற்​றுமதி செய்​யப்​படும்.

10 ஆயிரம் நியாய​விலைக் கடைகளுக்கு யுபிஐ பணப்​பரிவர்த்​தனை நடை​முறை​கள் விரிவுபடுத்​தப்​படும்.

தொடக்க கூட்​டுறவு வேளாண் மை மற்​றும் ஊரக வளர்ச்சி வங்​கி​களில் விவ​சா​யிகளுக்​கு, நீண்​ட​கால கடன் வழங்​கும் திட்​டம் ரூ.50 கோடி அளவுக்கு மீண்​டும் தொடங்​கப்​படும்.

டான்​பெட் நிறு​வனம் மூலம் விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​படும் உரங்​கள் மற்​றும் விதைகள் விற்​பனை ரூ.2,500 கோடிக்கு அதி​கரிக்​கப்​படும். வேளாண் விளைபொருள் ஈட்​டுக் கடன் ரூ.115 கோடியில்​இருந்து ரூ.300 கோடி​யாக அதி​கரித்து வழங்​கப்​படும்.

100 நியாய​விலைக் கடைகள் ரூ.7.67 கோடி மதிப்​பீட்​டில், பல்​நோக்கு சில்​லறை விற்​பனை நிலை​யங்​களாக மாற்றி அமைக்​கப்​படும்.

பொது விநி​யோகத் திட்ட பொருட்​களை நகர்வு செய்​யும் வாக​னங்​களை நிகழ்​நேர கண்​காணிப்பு செய்​யப்​படும் நடை​முறை ரூ.2 கோடியில் செயல்​படுத்​தப்​படும்.

விவ​சாயக் கழிவு மறுசுழற்சி தொழில் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்​களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு கடன் வழங்​கப்​படும்.

150 நியாய​விலைக் கடைகளுக்கு ரூ.15 கோடி மதிப்​பீட்​டில் சொந்த கட்​டிடங்​கள் கட்​டப்​படும் என்பன உள்​ளிட்ட 39 அறி​விப்​பு​களை அமைச்சர் வெளி​யிட்​டார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *