கடன் வாங்கி எம்எல்ஏக்களுக்கு கார் எதற்கு? – முதல்வருக்கு சீமான் கேள்வி!!

சென்னை:
எம்​எல்​ஏக்​களுக்கு இலவச கார் வழங்​கப்​படும் என்ற முதல்​வரின் அறி​விப்​புக்கு நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ‘அனைத்து எம்​எல்​ஏக்​களுக்​கும் இலவச கார் வழங்​கப்​படும்.

தனி உதவி​யாளர் மற்​றும் ஓட்​டுநருக்​கான ஊதி​யம், எரிபொருள் படி ஆகிய​வற்​றுக்​காக மாதம் ரூ.1 லட்​சம் கூடு​தலாக வழங்​கப்​படும்’ என்​று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளது அதிர்ச்​சி​யளிக்​கிறது.

கார் இல்​லாத எம்எல்ஏக்களுக்கு மட்​டும் அரசு கார் வழங்​கி​னால்​கூட நியா​யம் உண்டு.

ஆனால், தற்​போது தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள எம்எல்ஏக்களில் 190 பேரிடம் ஏற்​கெனவே சொந்​த​மாக கார் உள்​ள​தாக வேட்​பு மனு​வில் அவர்​கள் குறிப்​பிட்​டிருக்​கும் நிலை​யில், கடன் வாங்கி

புதி​தாக கார் எதற்கு? ஒரு கார் விலை குறைந்​த​பட்​சம் ரூ.30 லட்​சம் என்​றாலும், மொத்​த​மாக ரூ.70 கோடி தேவை. அதே​போல் 234 உறுப்​பினர்​களுக்​கும் மாதம் தலா ரூ.1 லட்​சம் வழங்க ஆண்​டுக்கு ரூ.28 கோடி தேவை.

இதெல்​லாம் யாருடைய வரிப்​பணம்? விவ​சா​யிகள் விளைய வைத்த நெல்லைப் பாது​காக்க கிடங்​கு​கள் இல்​லை.

ஆனால் ஏற்​கெனவே ஒன்​றுக்கு இரண்டு கார் வைத்​துள்ள எம்​எல்​ஏக்​களுக்கு சொகுசு வாக​னம் வழங்க இத்​தனை கோடிகளை வாரி இறைப்​ப​தா?

மறை​முக மின்​கட்டண உயர்​வு, சொத்​து ​வரி உயர்​வு, பேருந்து கட்டண உயர்வு போன்​றவற்றை சரி செய்​யாமல் மக்​கள் வரிப்​பணத்தை வீணடிக்​கும் இது​போன்ற திட்​டங்​களைக் கைவிட்​டு, ஆக்​கப்​பூர்​வ​ மக்​கள்​நலத் திட்​டங்​களை செயல்படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *