அரிசி, பருப்​பு, சர்க்​கரை உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய உணவுப் பொருட்​களின் விலை கடுமை​யாக உயர்ந்து வரு​கிறது!! சிபிஐ வலியுறுத்தல்…

சென்னை:
இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அரிசி, பருப்​பு, சர்க்​கரை உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய உணவுப் பொருட்​களின் விலை கடுமை​யாக உயர்ந்து வரு​கிறது.

கடந்த மாதம் கிலோ ரூ.48க்கு விற்​கப்​பட்ட ஒரு கிலோ சர்க்​கரை, தற்​போது ரூ.70 வரை விலை உயர்ந்​துள்​ளது. 25 லட்​சம் டன் கரும்பு எத்​த​னால் உற்​பத்​துக்கு திருப்​பி​விடப்​பட்​டுள்​ள​தாக​வும் கூறப்​படு​கிறது.

பெட்​ரோலில் 20 சதவீத எத்​த​னால் கலக்க வேண்​டும் என்ற மத்​திய அரசின் கொள்​கையே இதற்கு முக்​கியக் காரண​மாகும்.

விநாயகர் சதுர்த்​தி, தசரா, தீபாவளி போன்​றவை நெருங்கி வரும் காலத்​தில் சர்க்​கரை​யின் விலை ஏற்​றம் சாதாரண மக்​களை கடுமை​யாக பாதிக்​கும்.

சர்க்​கரை விலை உயர்​வால் டீ, காபி விலை மீண்​டும் உயரும். இதற்​கிடையே கர்​நாடகத்​தில் ஏற்​பட்ட விளைச்​சல் பாதிப்​பு, தமிழகத்​தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்​ளிட்ட காரணங்​களால் அரிசி விலை​யும் ஏறுகிறது.

பொன்னி அரிசி ரூ.80க்கு விற்​பனை ஆகிறது. இட்லி அரிசி ரூ.35 வரை அதி​கரித்​துள்​ளது.

அதே​போல் உளுத்​தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து ரூ.150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும் விலை உயர்ந்​துள்​ளது.

இந்த விலை உயர்வை கட்​டுப்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் போர்க்​கால அடிப்​படை​யில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அனைத்து அத்​தி​யா​வசிய பொருட்​களை​யும் ரேஷன் கடைகள் மூல​மாக குறைந்த விலை​யில் மக்​களுக்கு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர்​ வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *