திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.1.05 கோடி!!

திருத்தணி:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத் தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு, பிற மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 14-ம் தேதி நடைபெற்ற ஆடிப்பூரம் விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூரம் உள்ளிட்ட 11 நாட்களில் பக்தர்களின் காணிக்கையால் நிரம்பிய உண்டியல்கள் எண்ணும் பணி நேற்று முன்தினம் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ் பாபு, உஷா, மோகன் முன்னிலையில் நடைபெற்ற பணியில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், 11 நாட்களில் ரூ.1,05,54,389 மற்றும் 293 கிராம் தங்கம், 7.15 கிலோ வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி உள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *