மேஷம்
எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். நேற்றைய பிரச்சனை இன்று மீண்டும் தலைதூக்கும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
மிதுனம்
மகிழ்ச்சி கூடும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். உத்தியோகத்தில் புதுமைகளைச் செய்து மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
கடகம்
மறக்க முடியாத சம்பவம் நடைபெறும் நாள். தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள். புதிய வேலைக்கு செய்த முயற்சி கைகூடும். வரன்கள் முடிவாகும்.
கன்னி
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். வரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
துலாம்
முன்னேற்றப்பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். ஆற்றல்மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
தனுசு
வரவும் செலவும் சமமாகும் நாள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
மகரம்
எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் மறைமுகச் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டு.