நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களுக்​குத் தேவைப்​படும் உதவி​களை வழங்க அவசர உதவி எண்​களை அறி​வித்​த முதல்​வர் விஜய்!!

சென்னை:
நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் சிக்​கி​யுள்ள தமி​ழர்​களுக்​குத் தேவைப்​படும் உதவி​களை வழங்க அவசர உதவி எண்​களை முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நேபாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் தமி​ழர்​கள் உட்பட இந்​தி​யர்​கள் பலர் காணா​மல் போன​தாக வரும் செய்​தி​கள் அறிந்து மிகுந்த அதிர்ச்​சி​யும், துயர​மும் அடைந்​தேன்.

இந்த பேரிடரில் காணா​மல் போன தமி​ழ​கத்​தைச் சேர்ந்​தவர்​களை விரைந்து மீட்​க​வும், பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை வழங்​க​வும் அனைத்து நடவடிக்​கை​களை​யும் மேற்​கொள்​ளு​மாறு டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்ல அரசு உயர் அலு​வலர்களுக்கு உத்​தர​விட்​டுள்​ளேன்.

மேலும் நேபாளத்​தில் சிக்​கியுள்ள தமி​ழர்​கள் அல்​லது தமி​ழ​கத்​தில் உள்ள அவர்​களது குடும்​பத்​தினர் உதவிக்கு 80690 09901 என்ற அவசர தொலைபேசி எண்​ணைத் தொடர்பு கொள்​ளலாம். அதே​போல் இந்​தி​யா​வுக்​குள் 18003093793, வெளி​நாட்​டில் இருந்து +91 8069009900 எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம்.

டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்ல கட்​டுப்​பாட்டு அறைக்கு 92895 16712 என்ற எண்​ணைத் தொடர்பு கொண்டு தேவைப்​படும் உதவியைப் பெறலாம்.

இதற்​கிடையே இந்​திய வெளி​யுறவு அமைச்​சகம் மற்​றும் நேபாளத்​தில் உள்ள இந்​தி​யத் தூதரகம் ஆகிய​வற்​றின் வாயி​லாக, தமி​ழ​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் குறித்த தகவல்​களைப் பெற்​று, அவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யத் தேவை​யான நடவடிக்​கை​கள் விரைந்து மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு முதல்​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார்​.

கங்கையின் கிளை நதிகள் கோசி, கண்டக் ஆகியவை நேபாளம் மற்றும் பிஹார் வழிகளில் ஓடுகின்றன.

இவற்றில் கண்டக் நதி பிஹாரில் நாராயணி என்று அழைக்கப்படுகிறது. இந்த 2 நதிகளும் இமயமலையில் உருவாகி திபெத் வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன.

இந்நிலையில், நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் பிஹார் மாநிலம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஹார் முதல்வர் சம்ராட் சவுத்ரியுடன் அவசர ஆலோசனை நடத்தி, தேசிய பேரிடர் மீட்புப் படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளார்.

திபெத் எல்லைப் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சீனா தனது முழு படைகளையும் மீட்புப் பணியில் களமிறக்கி உள்ளது.

நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் அவசர கட்டுப் பாட்டு மையத்தைத் தொடங்கி இந்தியர்கள் மற்றும் சீனர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழை காலத்தில் தெற்கு ஆசியாவில் ஏற்படும் இந்த பேரழிவுகளுக்குப் புவி வெப்பமய மாதலே (காலநிலை மாற்றம்) முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *