நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கும்பகோணத் தைச் சேர்ந்த 21 தமிழர்க ளுக்கு அமைச்சர்கள் ஆறுதல்!!

புதுடெல்லி/சென்னை:
நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த 21 பேர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

முன்னதாக டெல்லியில் அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

திபெத் எல்லையில் ஏற்பட்ட பனிப்​பாறை சரிவு மற்​றும் ஏரி உடைப்​பால் நேபாளத்​தின் ரசுவா மாவட்​டத்​தில் உள்ள போடே கோசி மற்​றும் திரிசூலி ஆறுகளில் ஆக.26-ம் தேதி திடீரென வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

இதில் சிக்​கி​யுள்ள இந்​தி​யர்​களை அந்​நாட்டு அதி​காரி​கள் மூலம் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. இந்த வெள்​ளத்​தில் நூற்​றுக்​கும் மேற்​பட்ட தமிழர்​கள் சிக்​கி​யுள்​ளனர்.

இதையடுத்து முதல்​வர் விஜய், மீட்​புப் பணி​களை ஒருங்​கிணைக்​க​வும் டெல்​லி​யில் முகாமிட்டு பணி​களைக் கண்​காணிக்​க​வும் சிறப்பு அமைச்​சர்​கள் குழுவை நியமித்​தார்.

அதன்​படி டெல்​லி​யில் முகாமிட்​டுள்ள ஆதவ் அர்​ஜூ​னா, ராஜ்மோகன், வினோத் மற்​றும் தென்​னரசு ஆகியோர் அடங்​கிய அமைச்​சர்​கள் குழு, மீட்​புப் பணி​களைத் தொடர்ந்து முடுக்​கி​விட்​டுள்​ளது.

டெல்​லி​யில் உள்ள மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் கட்​டுப்​பாட்டு அறை மற்​றும் இந்​திய தூதரக அதி​காரி​களு​டன் அமைச்​சர்​கள் தொடர்ந்து ஆலோ​சனை நடத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், கும்​பகோணத்​தில் இருந்து சுற்​றுலா ஏஜென்சி மூலம் நேபாள கைலாஷ் யாத்​திரை சென்ற 57 பேரில் 21 பேர், வெள்​ளம் பாதித்த பகு​தி​களில் இருந்து நேற்று முன்​தினம் ராணுவ உதவி​யுடன் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர்.

தொடர்ந்து அவர்​கள் விமானம் மூலம் காத்​மாண்டு வழி​யாக நேற்று டெல்​லிக்கு அழைத்து வரப்​பட்​டனர்.

அவர்​களை மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் விமான நிலை​யத்​தில் வரவேற்​றார். அவருடன் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரனும் உடனிருந்​தார்.

அதைத் தொடர்ந்து தமிழக அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜூ​னா, ராஜ்மோகன், வினோத், தென்​னரசு ஆகியோர் விமான நிலை​யத்​துக்கு சென்று மீட்​கப்​பட்ட தமிழர்​களை வரவேற்​று, டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​துக்கு அழைத்​துச் சென்று தங்க வைத்​தனர்.

அவர்​களிடம் நலம் விசா​ரித்​து, அவர்​களுக்கு தேவை​யான உடனடி மருத்​துவ உதவி​கள், உணவு போன்​றவற்றை ஏற்​பாடு செய்​ததுடன், தமிழகத்​துக்கு புறப்பட தேவை​யான விமானம் மற்​றும் ரயில் பயண சீட்​டு​களை வழங்​க​வும் ஏற்​பாடு செய்​தனர்.

அதன்​படி, அவர்​கள் விமானம் மூலம் நேற்று இரவு டெல்​லி​யில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தனர்.

இதுதொடர்​பாக அமைச்​சர் ராஜ்மோகன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மீட்​கப்​பட்ட 21 தமிழர்​களின் உடல் நிலை சீராக உள்​ளது.

மீத​முள்ளவர்​களை எப்​படி​யா​வது தொடர்பு கொள்ள முடி​யுமா என்று கடுமை​யாக போராடி கொண்​டிருக்​கிறோம்.

தற்​போதைய நில​வரப்​படி 400 பேர் தமிழகத்​தில் இருந்து சென்​றிருக்​கலாம்.

நேபாளத்​தில் நில​வும் பேரிடர் சூழலில் சிக்​கி​யுள்ள ஒவ்​வொரு தமிழரை​யும் பாது​காப்​பாகத் தமிழகத்​துக்கு அழைத்து வரும் வரை இந்த மீட்பு நடவடிக்​கைகள் ஓயாது.

பா​திக்​கப்​பட்​ட​வர்​களுக்​குத் தேவை​யான அனைத்து உதவி​களை​யும் செய்ய தமிழக அரசு தயா​ராக உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *