ஆந்திரா;
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து யோகா செய்தார். ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலரும் காலை 6.30 மணி முதல் யோகா செய்தனர். இந்நிகழ்ச்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர்.
சர்வதேச யோகா தினம் 2025 நேரலை: மனிதகுலத்திற்குத் தேவையான இடைநிறுத்த பொத்தான் யோகா என்று 2025 சர்வதேச யோகா தினத்தில் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி கூறுகிறார்.

ஜூன் 21 அன்று இந்தியா மற்றும் உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் 11வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள், “ஒரு பூமிக்கான யோகா, ஒரு ஆரோக்கியம்” ஆகும். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரையில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து யோகா செய்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஆந்திர மக்களுக்கும், யோகா மேற்கொள்வோருக்கும் வாழ்த்துகள். உலக மக்களின் அன்றாட அங்கமாக யோகா மாறியுள்ளது. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது.
சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசியுள்ளேன். யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த யோகா உதவும். மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” என்றார்.