துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்​த வைபவ் சூர்யவன்ஷி!!

பெங்களூரு:
துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரில் இளம் வயதில் அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்​துள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி.

துலீப் டிராபி கிரிக்​கெட் தொடரின் அரை இறுதி ஆட்​டத்​தில் மத்​திய மண்​டலம் – கிழக்கு மண்​டலம் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மைய ஆடு​களத்​தில் நடை​பெற்று வரு​கிறது.

இதன் முதல் நாள் ஆட்​டத்​தில் மத்​திய மண்​டலம் அணி 80.1 ஓவர்​களில் 266 ரன்​களுக்கு முதல் இன்​னிங்​ஸில் ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ரிங்கு சிங் 60, ஆர்​யன் ஜூயல் 46 ரன்​கள் சேர்த்​தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்​தில் தனது பேட்​டிங்கை தொடங்​கிய கிழக்கு மண்டல அணிக்கு அபிமன்யு ஈஸ்​வரன், வைபவ் சூர்​ய​வன்ஷி ஜோடி அதிரடி தொடக்​கம் கொடுத்​தது.

வைபவ் சூர்​ய​வன்ஷி 42 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் அரை சதம் அடித்​தார்.

இதன் மூலம் துலீப் டிராபி​யில் இளம் வயதில் அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்​தார் வைபவ் சூர்​ய​வன்​ஷி. அவருக்கு 15 வயது 175 நாட்​கள் ஆகிறது.

இதற்கு முன்​னர் துலீப் டிராபி போட்​டி​யில் அரைசதம் அடித்த இளம் வயது பேட்​டர் என்ற சாதனை லக் ஷ்மன் சிங் வசம் இருந்​தது. அவர், 1969-ல் இந்த சாதனையை எட்​டி​யிருந்​தார். அப்​போது அவருக்கு 16 வயது 23 நாட்​கள் ஆகும்.

இந்த சாதனையை 57 ஆண்​டு​களுக்கு பின்​னர் தற்​போது முறியடித்து புதிய சாதனை படைத்​துள்​ளார் வைபவ் சூர்​ய​வன்​ஷி.

அதிரடி​யாக விளை​யாடிய வைபவ் சூர்​ய​வன்ஷி 81 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 92 ரன்​கள் விளாசிய நிலை​யில் ஹர்ஷ் துபே பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய அபிமன்யு ஈஸ்​வரன் 106 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 69 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆர்​யன் பாண்டே பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

முதல் விக்​கெட்​டுக்கு சூர்​ய​வன்​ஷி, அபிமன்யு ஈஸ்​வரன் ஜோடி 25.2 ஓவர்​களில் 161 ரன்​கள் குவித்​தது. இதன் பின்​னர் சீரான இடைவேளை​யில் விக்​கெட்​களை பறி​கொடுத்த கிழக்கு மண்டல அணி 57 ஓவர்​களில் 266 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

குமார் குஷாக்ரா 0, சுதிப் குமார் கராமி 25, விராட் சிங் 5, கேப்​டன் இஷான் கிஷன் 16, அனுகுல் ராய் 16, முகமது கவுனைன் குரேஷி 13, அபிஜித் சர்க்​கார் 2, முகேஷ் குமார் 3 ரன்​களில் நடையை கட்​டினர்.

மத்​திய மண்​டலம் அணி தரப்​பில் ஹர்ஷ் துபே 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். ஆர்​யன் பாண்​டே, யாஷ் தாக்​குர் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.

இதையடுத்து 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய மத்​திய மண்​டலம் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 45 ரன்​கள் எடுத்​தது.

குணால் சந்​தேலா 2, ஆர்​யன் ஜூயல் 8, கேப்​டன் ரஜத் பட்​டி​தார் 5 ரன்​களில் வெளி​யேறினர். அமன் மோஹதே 23, ஆர்​யன் பாண்டே 4 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

கைவசம் 7 விக்​கெட்​கள் இருக்க மத்​திய மண்​டலம் அணி இன்று 3-வது நாள்​ ஆட்​டத்​தை தொடர்ந்​து விளை​யாடுகிறது.துலீப் டிராபி தொடரில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *