மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என்று தலைப்பு; முதல் தோற்றமும் வெளியீடு!!

சென்னை:
மணிரத்னம் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கும் படத்துக்கு ‘இஞ்சி வெல்லம்’ என்று தலைப் பிடப்பட்டுள்ளது. அதன் முதல் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கமல் – த்ரிஷா நடித்திருந்த ‘தக் லைஃப்’ படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி – சாய் பல்லவி நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக் ஷன்ஸ் வழங்குகிறது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

தலைப்பிடப்படாமல் இருந்த இந்தப் படத்துக்கு தற்போது ‘இஞ்சி வெல்லம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

வீடியோ போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

45 விநாடிகள் ஓடும் அந்தப் போஸ்டரில் இருள் திரையில் மின்னல் வெட்ட மழை பெய்கிறது.

திரை இருளாக ‘இஞ்சி வெல்லம்’ எனத் தலைப்பு வருகிறது.

இப்போது ஒரு பெண் குரல் படத்தின் தலைப்பைக் கூறுகிறது. நீ இஞ்சி நான் வெல்லம் எனக் கூற, தொடர்ந்து திரை இருளாக, மீண்டுமொரு மின்னல் வெட்டில் இரும்பு பாலத்தின் கீழ் நீண்டு ஒடும் ஆறு தெரிகிறது.

அந்தக் குரல், இல்லை… இல்லை.. நீ வெல்லம், நான் இஞ்சி; வெல்லம் இஞ்சி எனக் கூற, அந்தத் தலைப்பும் திரையில் தெரிகிறது.

இப்போது ஆண் குரல், இல்லை ‘இஞ்சி வெல்லம்’ இருக்கட்டும் எனக் கூற, மழை நனைந்து பனித்துளிகள் சுமக்கும் பூக்களாய் தலை உரசி விஜய் சேதுபதியும் சாய் பல்லவியும் தோன்றுகிறார்கள்.

படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

கதைக்களம், நடிகர், நடிகைகள் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில், படம் 2027, ஜனவரியில் வெளியாகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *