பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் சபலென்கா, மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி… !!

சென்னை:
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.


‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

கிராண்ட்ஸ்லாமுக்கு அடுத்தபடியாக கவுரமிக்க போட்டியான இதில் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் 8 வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று நடந்த முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் கரோலினா முசோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-2), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-4, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *