உலக கால்பந்து லெவனில் லியோனல் மெஸ்சி தேர்வு!!

சென்னை:
உலகின் சிறந்த கால்பந்து லெவனை (11 பேர்) உலகளாவிய கூட்டமைப்பு ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்துள்ளது. கிட்டத்தட்ட 20 ஆயிரம் வீரர்கள் உலகின் சிறந்த வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்தனர்.


சர்வதேச போட்டியில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற 39 வயதான அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி உலகின் சிறந்த கால்பந்து லெவனில் இடம்பெற்றுள்ளார்.

அவர் 18-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார். கடைசியாக 2023-ம் ஆண்டு மெஸ்சி உலகின் சிறந்த கால்பந்து லெவனில் இடம் பெற்றிருந்தார்.

ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள ஒரு கிளப்பிற்காக ஆடுபவர் முன்கள வீரராக தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும். லியோனல் மெஸ்சி தற்போது அமெரிக்காவில் உள்ள இண்டர்மியாமி கிளப்புக்காக ஆடி வருகிறார்.

நட்சத்திர வீரர்களான பிரான்சின் எம்பாப்பே, நார்வேயின் எர்லிங் ஹாலண்ட், ஜெர்மனியின் லாமின் யாமல் ஆகியோரும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.


உலகின் சிறந்த கால்பந்து லெவனில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஹாரிகேன் இடம்பெறவில்லை. அவர் சமீபத்தில் உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை பெற்றிருந்தார். இந்த அணியில் உலக சாம்பியனான ஸ்பெயின் அணி வீரர்களே அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர்.

உலக கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து லெவன் வருமாறு:

கோல்கீப்பர்: டேவிட் ராயா (ஸ்பெயின்).
பின்களம்: பாவ்குபார்சி (ஸ்பெயின்), ஹகீமி (மொராக்கோ), நூனோ மெண்டஸ் (போர்ச்சுக்கல்).
நடுகளம்: ஜூட்பெல் லிங்காம் (இங்கிலாந்து), ரோட்ரி (ஸ்பெயின்), விட்டினா (போர்ச்சுக்கல்).
முன்களம்: எர்லிங் ஹாலண்ட் (நார்வே), எம்பாப்பே (பிரான்ஸ்), லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), லமின் யாமல் (ஸ்பெயின்).

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *