தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை; அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது – தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு!!

சென்னை:
‘தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் செல்வதற்காக விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல் நிலையத்துக்கு ஒரு அமைச்சர் சென்று எந்த அடிப்படையில் ஆய்வு செய்கிறார்? அதிகாரிகள், அரசின் ஒப்புதலின் அடிப்படையில்தான் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

ஆனால், தேனி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து அதிகாரிகள் அனுமதி இல்லாமல் தவெகவினர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகள் வெட்கக்கேடானவை.

தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்பான செய்திகள் வராத நாளே இல்லை, அந்த அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை.

பொதுவெளி யில் வந்து மக்களைச் சந்தித்தால்தான் அவர்களின் பிரச்சினைகள் என்ன என்பது முதல்வருக்குத் தெரியவரும்.

தமிழக மக்களின் பிரதான பிரச்சினையாக காவிரி நீர் விவகாரம் இருக்கும் நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய முறையில் குரல் கொடுத்து எடுத்துரைத்திருக்க வேண்டும்.

ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கும் ஆட்சியில் பங்கெடுத்துள்ளது. இருப்பினும் தமிழகத்துக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *