காருக்குள் தம்பியை தவறுதலாக சுட்ட அண்ணன்!!

அமெரிக்கா;
அமெரிக்காவில் இந்தியர் தனது அண்ணனால் தவறுதலாக சுடப்பட்டு உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான முகமது இப்ராஹிம் அகமது. இவர் அமெரிக்காவின் லாங் ஐலண்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார்.

அவர் கடந்த நவம்பர் 14 அன்று தனது மூத்த சகோதரர் முகமது பஷீர் அகமது உடன் நியூ யார்க் நகரில் ஹிக்ஸ்வில்லில் உள்ள 459 சவுத் பிராட்வே அருகே காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அண்ணன் பஷீர் அகமது கையில் இருந்து கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்தது.
இதில் தம்பி இப்ராஹிம் முகமது முதுகில் தோட்டா பாய்ந்தது. இப்ராஹிம் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

அந்தக் கைத்துப்பாக்கி எப்படி காரில் வந்தது அல்லது அது எப்படிச் சுட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


காவல்துறை விசாரணையை தொடர்ந்து, பஷீர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 2-ன்ட் டிகிரி தற்செயலான கொலை மற்றும் 2-ன்ட் டிகிரி சட்டவிரோத ஆயுதக் கையிருப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளன.

அவர் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டுள்ளார். தனது அடுத்த விசாரணைக்காக அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *