2027 ஜனவரி 1 முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் கட்டாயம் விசா பெற்றிருக்க வேண்டும்!! விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை நிறுத்திய மலேசியா…..

மலேசியா;

பாஸ்போர்ட் வைத்துள்ள இந்தியர்கள், சுற்றுலா, வணிகம் மற்றும் சமூக பயணங்களுக்காக விசா இல்லாமல் 30 நாட்கள் வரை மலேசியாவிற்கு செல்ல அனுமதி இருந்தது இருந்தது.

கோவிட்19 பெருந்தொற்றைத் தொடர்ந்து, அதிக சர்வதேசப் பயணிகளை ஈர்ப்பதற்கான மலேசியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த விசா இல்லா வசதி 2023 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 2027 ஜனவரி 1 முதல் மலேசியா செல்லும் இந்தியர்கள் கட்டாயம் விசா பெற்றிருக்க வேண்டும் என்று அந்நாட்டு குடிவரவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

மலேசியாவுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் அனைவரும் அந்நாட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே செல்லுபடியாகும் விசாவை பெற்றிப்பது கட்ட்டயமாகும்.


மலேசியாவில் வேலை தேடும் சில இந்தியர்கள், விசா இல்லாமல் பயணிக்கும் வசதியைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1 முதல் மலேசியாவின் MyVISA ஆன்லைன் போர்ட்டல் மூலம் விசா விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


இது, பயணிகள் இந்த மாற்றத்திற்கு தயாராவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை அளிக்கிறது.

மேலும் 7 வேலை நாட்களுக்கு மேலாக நிலுவையில் இருக்கும் விசா விண்ணப்பங்கள் தானாகவே காலாவதியாகிவிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்த இந்த விதிமுறைப்படி இது கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உள்பட அனைத்து விண்ணப்பங்களுக்கும் பொருந்தும்.


விண்ணப்பங்களின் காலாவதி தேதி முடிந்த விண்ணப்பதாரர்கள், புதுப்பிக்கப்பட்ட விசா படிவத்தைப் பயன்படுத்தி புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும், பயணத் திட்டங்கள் மாறினாலும் அல்லது அரசாங்கம் தனது விசா கொள்கையைத் திருத்தியமைத்தாலும், விசா கட்டணம் திரும்பப் வழங்கப்படாது.


மேலும் மலேசியாவில் தங்கியிருக்கும் காலம் முழுவதையும் உள்ளடக்கிய பயண மருத்துவக் காப்பீட்டைப் பெற்றுக்கொள்ளுமாறு வெளிநாட்டுப் பயணிகளுக்கு மலேசியா அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டினர் தங்கள் வருகையின் போது பெறும் மருத்துவ சிகிச்சை மற்றும் அது தொடர்பான சுகாதார சேவைகளுக்கான செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் என குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது.


MyTripPass வழங்கும் காப்பீட்டுச் சான்றிதழை, விசா விண்ணப்பங்களுக்கான துணை ஆவணமாக சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலேசிய செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 2019-ல் சுமார் 7.3 லட்சத்திலிருந்து 2024-ல் 13.6 லட்சமாகவும், 2025-ல் 15.6 லட்சமாகவும் அதிகரித்துள்ளது.


2026 முதல் ஆறு மாதங்களில் 7.4 லட்சம் இந்தியர்கள் மலேசிய பயணம் மேற்கொண்டுள்ளனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *