ஈஷா யோகா மையத்தில் சுவாமி தரிசனம் செய்த கங்கனா ரனாவத் !!

கோவை:
தமிழில் தாம்தூம், சந்திரமுகி-2, தலைவி உள்ளிட்ட படங்களிலும், இந்தியிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத்.

இவர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பியானார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர், கங்கனாவை கன்னத்தில் கடுமையாக அறைந்தார். இந்த விஷயம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட நடிகையும், எம்.பியுமான கங்கனா ரனாவத் நேற்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு வந்தார்.

அங்குள்ள ஆதியோகி சிலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவிடம் ஆசீர்வாதம் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் கங்கனா ரனாவத் ஈஷா யோகா மையத்திற்கு வருகை தந்து இரவு முழுவதும் உறங்காமல் சிவனை வழிபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா இங்கு வருகை தந்து தியானத்தில் ஈடுபட்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *