”தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வழிபடும் தலம்”!!

தமிழகத்திலேயே மிகவும் உயரமான வழுக்கு மரம் உள்ள கிருஷ்ணர் கோவில், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணன் கோவில் தான்.

இங்குள்ள வழுக்கு மரக்கம்பத்தின் உயரம் 30 அடி.

ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, இரண்டு வாரங்களுக்கு முன் சோற்றுக் கற்றாழையுடன் விளக்கெண்ணை கலந்து இந்த வழுக்கு மரத்தில் பூசி, கோவில் வாசலில் நடுவார்கள்.

இந்த வழுக்கு மரத்தில் ஏறி பண முடிப்பு பெறுவதை இந்த பகுதி மக்கள் கவுரவமாக கருதுகின்றனர்.

திருக்கண்ணமங்கை

திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் திருக்கண்ணமங்கை என்ற ஊர் இருக்கிறது. இங்குள்ள மூலவரை ‘பத்தராவிப் பெருமாள்’ என்பர்.

பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார்.

பக்தர்கள் மீது குழந்தை போல அன்பு காட்டுவதால் ‘பக்தவத்சலன்’ என்றும் பெயர் உண்டு.

இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.

அதை உணர்த்தும் வகையில் தாயார் சன்னதியின் வடபுறத்தில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது.

இங்கு ஒருநாள் தங்கி, பக்தியுடன் பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *