கோவை ;
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த வரிசையில் வீடு இல்லாத ஏழை எளியோருக்கு தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை கட்டிக் கொடுத்து வருகிறார்.
இதில் ஒரு பகுதியாக, கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர், தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்து , வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கி அசத்தியுள்ளனர்.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேசிய செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பயனாளியிடம் வீட்டின் சாவியை வழங்கி, வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வழங்கினார்.