நாமக்கல்லில் கழிவு நீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் இரண்டு ஆண்டு சிறை என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் -2013, படி தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்க் மற்றும் கழிவுநீர் பாதையினுள் இறங்கி (Sewer line) சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும்.
ஒரு கட்டிடத்தில் செப்டிக் டேங்க் அல்லது கழிவு நீர் பாதை (sewer line) சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் / கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர், நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரரே பொறுப்பாவார்கள்.
சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் கட்டிட உரிமையாளர்/ வாடகைக்கு குடியிருப்போர்/ ஒப்பந்ததாரர் மீது காவல்துறை மூலம் FIR பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கழிவுநீரை அகற்ற, சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
கல்வி, வணிக நிறுவனங்கள், ஆலைகளில் கழிவுநீரை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை,ரூ. 2லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.