தமிழ்நாடு சட்டப்பேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவம் குறித்து விவாதிக்க அதிமுக உட்பட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிடப்பட்டது.
அதிமுக, பாமக உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வருகை புரிந்தனர். இதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக உறுப்பினர் அனைவரும் இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருப்பினும் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கவில்லை; சட்டப்பேரவை மாண்பை குலைக்கும் வகையில் நடந்துகொண்டதால் வெளியேற்றப்பட்டனர்.
பேரவையில் அமளியில் ஈடுபட்டோர் பேசியது எதுவும் பேரவை குறிப்பில் இடம்பெறாது; விதிகளை மீறி நடந்து கொண்டதால் ஒருநாள் மட்டும் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.