மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், எதிர்கட்சிகள் சார்பில் மவெலிக்கரா எம்.பி. கே. சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
சபாநாயகர் பதவிக்கான இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ் தோல்வி அடைந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகராக ஓம் பிர்லா தேவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இணைந்து ஓர் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.ஓம் பிர்லாவுக்கு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.