சென்னை:
டாஸ்மாக்ஊழல் பின்னணியில் உள்ள #அந்ததியாகி_யார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், டாஸ்மாக்ஊழல் பின்னணியில் உள்ள #அந்ததியாகியார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் அதிமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்ட பதிவில், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில்,அமலாக்கத்துறை அறிக்கையில் சொன்ன ஆயிரம் கோடி ரூபாய் #டாஸ்மாக்ஊழல் பின்னணியில் உள்ள #அந்ததியாகியார் ? என்ற கேள்வியை பேட்ஜாக அணிந்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.