சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை: கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்!!

சென்னை:
தவெக ஆதர​வுடன் மாநிலங்​களவை எம்​.பி.​யாக காங்​கிரஸ் கட்​சி​யின் சார்​பில் பிர​வீன் சக்​கர​வர்த்தி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார்.

இதையடுத்து தான் எம்​.பி.​யாக தேர்வு செய்​யப்​பட்​டிருப்​பது குறித்து அவர் வெளி​யிட்ட பதி​வில், “தமிழ்​நாடு சமூக நீதி முற்​போக்கு கூட்​ட​ணி​யின் (தவெக, காங்​கிரஸ், விசிக, ஐயுஎம்​எல், சிபிஐ, சிபிஎம்) முதல் எம்​.பி. வேட்​பாள​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டதை பெரு​மை​யாக​வும், பெரும் பொறுப்​பாக​வும் கருதுகிறேன்”. என்று அதில் குறிப்​பிட்​டிருந்​தார்.

தவெக தலை​மையி​லான கூட்​ட​ணி​யின் பெயர் இனி இது தான் என பரவலாக பேசப்​பட்ட நிலை​யில், இந்த கூட்​ட​ணி​யில் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் பெயர்​களை சேர்த்​தது தவறு என அக்​கட்​சிகளின் மாநில செய​லா​ளர்​கள், பிர​வீன் சக்​கர​வர்த்​திக்கு கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது:

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்டியன்: பிர​வீன் சக்​கர​வர்த்​தி, ‘தமிழ்​நாடு சமூக நீதி முற்​போக்கு கூட்​ட​ணி’​யில் இடம் பெற்​றுள்​ளது போல் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் பெயரை​யும் குறிப்​பிட்​டிருப்​பது தவறானது.

இத்​தகைய கூட்​டணி அமைப்​பது குறித்​தோ, இந்த வேட்​பாள​ருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்​களை நாட​வில்​லை.

சட்​டப்​பேரவை தேர்​தலில் 108 இடங்​களை தவெக பெற்ற நிலை​யில், ஆளுநர் ஆட்சி அமைந்​து​விடக் கூடாது என்ற அடிப்​படை​யில் தவெக​வுக்கு ஆதரவு அளித்​தோம்.

பிர​வீன் சக்​கர​வர்த்தி குறிப்​பிட்​டுள்​ளது போன்ற ஓர் கூட்​ட​ணி​யில், இந்​தி​ய கம்யூனிஸ்ட் கட்சி இடம்​பெற​வில்லை என்​பதை திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்து கொள்​கிறோம்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்முகம்: புதிய கூட்​ட​ணி​யின் சார்​பில் தான் மாநிலங்​களவை வேட்​பாள​ராக நிறுத்​தப்​பட்டு இருப்​ப​தாக​வும், அதில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் பெயரை​யும் பிர​வீன் சக்​கர​வர்த்தி குறிப்​பிட்​டிருப்​பது தவறானது.

கூட்​டணி அமைப்​பது குறித்​தோ, இந்த வேட்​பாள​ருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்​களை அணுகவோ, ஆலோ​சிக்​கவோ இல்​லை.

தவெக ஆட்சி அமைக்க மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்​படை​யில் ஆதரவு தெரி​வித்​துள்​ளோம் என்​பது ஏற்​கெனவே தெளி​வாக கூறி​விட்​டோம்.

பிர​வீன் சக்​கர​வர்த்​தி​யின் பதிவை அதிக பிரசங்​கித்​தனம் என்று தான் சொல்ல வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *