தமிழ்நாட்டுக்கான ப்ரீமியம் இலை தேநீர் வகை ”டாடா டீ சக்ரா கோல்ட் ப்ரீமியம் லீஃப் டீ ”அறிமுகம்

சேலம்,
தமிழ்நாட்டின் தேநீர் சந்தையில் தனக்கென ஒரு இடம்பிடித்திருக்கும், புகழ்பெற்ற நிறுவனமான டாடா டீ சக்ரா கோல்ட், தனது புதிய ப்ரீமியம் தேநீரான ‘டாடா டீ சக்ரா கோல்ட் ப்ரீமியம் லீஃப் டீ’ -யை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இலை தேநீர் சந்தையில் அடியெடுத்து வைக்கும் நோக்கத்துடன் செயல்பாட்டு யுக்தியின் அடிப்படையில் இந்த ப்ரீமியம் தேயிலை மிக கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்ஸாம் தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

மேலும், இந்த தேயிலையானது மிகவும் உயரமான அதிகம் வளர்ந்த பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீண்ட இலைகளுடன் கலந்து இருப்பது இலை தேநீரூக்கு கூடுதல் சுவையும், அருமையான நறுமணத்தையும் கொடுக்கிறது.

நீண்ட இலைகளுடன் தேயிலை கலந்து இருப்பதால், வழக்கமான தேயிலைகளிலிருந்து மாறுப்பட்டு தனித்துவமிக்க சுவையையும், குணத்தையும் கொண்டிருக்கிறது.

டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்தின் பேக்கேஜ் செய்யப்பட்ட பானங்களின் இந்தியா & தெற்காசியா தலைவர். புனீத் தாஸ், தலைவர் இந்த அறிமுகம் குறித்து கூறுகையில்;

“இதுவரையில், டாடா டீ சக்ரா கோல்ட், மிக நுண்ணிய அளவிலான தேயிலை துகள்/இலைகளுடன் கூடிய ப்ரீமியம் டஸ்ட் டீ ஆக சந்தையில் கிடைக்கிறது.

இதன் சுவையும், குணமும் தமிழ்நாட்டில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ற அதீத சுவையுடன் கூடிய தேநீரை வழங்கி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, . தமிழ்நாட்டில் நாங்கள் அறிமுகம் செய்திருக்கும் புதிய வகை டாடா டீ சக்ரா கோல்ட் லீஃப் டீ,எங்கள் பிராண்டின் மிக நீண்ட பாரம்பரியத்தை ப்ரீமியம் லீஃப் டீ பிரிவில் மேலும் விரிவுபடுத்துகிறது.

பெரிய துகள் அளவிலான இலைகளின் கலவையான ப்ரீமியம் லீஃப் டீ பிரிவில்,குறிப்பாக தெற்கில் பரவலாக இருக்கும் சந்தைகளில், அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சரியான தேர்வாகவும், வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும் இருக்கிறது’’ என்றார்.

இந்த புதிய ப்ரீமியம் லீஃப் டீ அறிமுகமானது, மிக உயர்தரம் மற்றும் அலாதியான சுவையின் சாராம்சத்தை அப்படியே வழங்கும் மேலும் இதன் அறிமுகம் தமிழ்நாட்டிலுள்ள எங்களது மேலான வாடிக்கையாளர்களுக்கு சுவையும் நறுமணமும் இருக்கும் மேம்பட்ட தேநீர் அருந்தும் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

திரைப்பட நட்சத்திரம் ராஷ்மிகா மந்தனாவை எங்களின் ப்ராண்ட் தூதராக நாங்கள் பெற்றிருப்பது, ராஷ்மிகாவின் வெற்றிகரமான பயணம் மற்றும் எங்கள் ப்ராண்ட்டின் கொள்கைகள் இரண்டையும் வரையறுக்கும் மதிப்புகளுடன் அமைந்திருக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மக்களிடையே பெரும் அங்கீகாரம் பெற்ற டாடா டீ ப்ராண்ட் இதற்கு முன் உயர் தரம் மற்றும் அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களின் ரசனைகளை பூர்த்தி செய்வதற்காக டாடா டீ சக்ரா கோல்ட் இலாச்சி மற்றும் டாடா டீ சக்ரா கோல்ட் கேர் போன்ற புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

டாடா டீ சக்ரா கோல்ட் ப்ரீமியம் லீஃப் டீ, மிக உயர்ந்த பகுதிகளில் வளர்ந்த நீண்ட தேயிலைகளுடன் கலந்த ப்ரீமியம் தரத்தில் இருப்பதால், ஒரு புத்துணர்ச்சியூட்டும் சுவை மற்றும் நறுமணத்துடன் மற்ற தேயிலைகளிலிருந்து மாறுபட்ட தனித்துவமிக்க தேயிலையாக இருக்கிறது.

தற்போது தமிழ்நாடு தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில், பல்வேறு அளவுகளில் 100 கிராம், 250 கிராம் மற்றும் 500 கிராம் என பல அளவுகளில் கிடைக்கும்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *