வாரம் ஒரு திருமந்திரம் ‘திருவாசகம்’ உங்களுக்காக…!

மனதை உருகச் செய்யும் செய்யுள்களால் இறைவனை போற்றிப் பாடிய மாணிக்கவாசகர், அதனை `திருவாசகம்’ என்ற பெயரில் தொகுத்தார். இந்த திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் 8-ம் திருமுறையாக வைத்து போற்றப்படுகிறது.

இந்த நூலில் இருந்து வாரம் ஒரு பாட லையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.

பாடல்:

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்து அடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான்…

விளக்கம்:-

புதியதாக கறந்த பசும் பாலுடன் கரும்பின் சாறும், நெய்யும் கலந்தால், அதன் சுவை எவ்வளவு தித்திப்பாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். அதுபோலத்தான் தன்னுடைய பக்தர்கள் மற்றும் அடியவர்களின் மனதில் தேன் ஊற்றெடுப்பது போல நின்று, அவர்களின் இந்தப் பிறவியை முற்றுப்பெறச் செய்யும் எங்களுடைய சிவபெருமானே..

ஐந்து முகங்களுடன், ஐந்து வண்ணங்களை தாங்கி அருள்பவன் நீ.. தேவர்கள் அனைவரும் உன்னை போற்றி வணங்கும்போது, அவர்களுக்கு அரிதானவராய் மறைந்திருந்து அருள் செய்யும் எம்பெருமானே…

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *