சென்னை,
நாய்களை பாதுகாக்கவே ஓட்டுப் போட்டோம் என நிவேதா பெத்துராஜ் கூறினார். தெருநாய்களை பாதுகாக்க கோரி விலங்குகளுக்கான சொர்க்கம் என்ற அரசுசாரா அமைப்பு சார்பில், புதுப்பேட்டையில் உள்ள லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து ரமடா ஓட்டல் வரையில் நேற்று அமைதி பேரணி நடந்தது.
இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
தெரு நாய்களுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்தியும், தெருநாய்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியும் பேரணியாக நடந்து சென்றனர்.
அப்போது நடிகை நிவேதா பெத்துராஜ் , தெரு நாய்களை பாதுகாப்பது அரசின் கடமை என்றும் அதற்காகத்தான் வாக்களித்துள்ளோம் எனவும் கூறினார்.
நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு சென்னை மாநகராட்சி கட்டணம் வசூலிப்பதற்கும், அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.