உலகக் கோப்பை கபடி ; சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!!

டாக்கா:
மகளிர் உலகக் கோப்பை கபடி தொடர் வங்​கதேசத்​தில் உள்ள டாக்கா நகரில் நடை​பெற்று வந்​தது. 11 அணி​கள் கலந்து கொண்ட இந்த தொடரின் இதன் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி நேற்று சீன தைபேவுடன் மோதி​யது.

பரபரப்​பாக நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 35-28 என்ற புள்​ளி​கள் கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்​சியாக 2-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்​றது. சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்​பாக அவர், தனது எக்ஸ் வலைதள பதி​வில், “கபடி உலகக் கோப்​பையை வென்று தேசத்​தைப் பெரு​மைப்​படுத்​திய நமது இந்​திய மகளிர் கபடி அணிக்கு வாழ்த்​துக்​கள். அவர்​கள் சிறந்த மன உறு​தி, திறமை மற்​றும் அர்ப்​பணிப்பை வெளிப்படுத்தி​யுள்​ளனர்.

அவர்​களின் வெற்றி எண்​ணற்ற இளைஞர்​களை கபடி​யில் ஈடு​பட​வும், பெரியகனவு காண​வும், உயர்ந்த இலக்கை அடைய​வும் ஊக்​குவிக்​கும்” எனத் தெரிவித்துள்ளார்​.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *