விசுவாவசு ஆண்டு கார்த்திகை-15 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : ரேவதி இரவு 7.52 மணி வரை பிறகு அசுவினி
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம்
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் வெள்ளி விமானத்திலும் இரவு ஸ்ரீ சுவாமி குதிரை வாகனத்திலும் பவனி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம்.
திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பரிசு
ரிஷபம்-தனம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நற்செயல்
சிம்மம்-லாபம்
கன்னி-உழைப்பு
துலாம்- உயர்வு
விருச்சிகம்-நலம்
தனுசு- பெருமை
மகரம்-நன்மை
கும்பம்-வாழ்வு
மீனம்-கடமை