முருகனின் 3-ம் படைவீடான பழனி திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
யாகசாலையில் வைத்த புனிதநீர் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று இருந்தனர்.
திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா’ என்று கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.