து​பாய் புறப்​பட்ட பயணி​கள் விமானத்​தில் இயந்திர கோளாறு ஏற்​பட்​ட​தால் பயணம் ரத்து!!

சென்னை:
து​பாய் புறப்​பட்ட பயணி​கள் விமானத்​தில் இயந்திர கோளாறு ஏற்​பட்​ட​தால் பயணம் ரத்து செய்யப்பட்டது. சென்​னை​யில் இருந்து துபாய் செல்​லும் எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானம், 284 பயணி​கள், 12 ஊழியர்​களு​டன் நேற்று அதி​காலை 3.50 மணிக்கு புறப்பட்டது.

இந்த போயிங் ரக பெரிய விமானம் ஓடு​பாதை​யில் ஓடத் தொடங்​கிய​போது, இயந்திர கோளாறு ஏற்​பட்​டிருப்​பதை விமானி கண்​டு​பிடித்​தார்.

தொடர்ந்து விமானத்தை இயக்​கு​வது ஆபத்து என்​பதை உணர்ந்த விமானி, உடனடி​யாக விமானத்தை ஓடு​பாதை​யில் நிறுத்​தி​விட்​டு, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார்.

இதையடுத்​து, இழுவை வாக​னங்​கள் மூலம் விமானம் இழுத்து வரப்​பட்டு புறப்​பட்ட இடத்​திலேயே நிறுத்​தப்​பட்​டது. விமான பொறி​யாளர்​கள் சென்று பழுது பார்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர்.

ஆனால், உடனடி​யாக பழுது சரிசெய்ய முடிய​வில்​லை. இதையடுத்​து, விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

விமானத்​தில் இருந்து பயணி​கள் அனை​வரும் கீழே இறக்​கப்​பட்​டு, சொகுசு பேருந்​துகள் மூலம் சென்​னை​யில் உள்ள பல்​வேறு ஹோட்​டல்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். சரி​யான நேரத்​தில் இயந்திர கோளாறு கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *