ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் எதற்காக உடனே டெலிட் செய்தார்?….. அண்ணாமலை கேள்வி….

கோவை;

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,

பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மத்திய அரசு மீது குற்றம் சாட்டும் முன்பாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள் என்றார் . மேலும் மு.க.ஸ்டாலினுக்கு  செலெக்ட்டிவ் அம்னீசியா என்றும் விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது எனவும் திமுகவின் அயலக அணியில் உள்ளவர் தான் ஜாபர் சாதிக் என்றாலும் அது குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார். மேலும் ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் எதற்காக டெலிட் செய்தார்? டி.ஜி.பியை பலிகடா ஆக்க திமுக பார்க்கிறது என்று கூறினார்.

கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும்.

பாஜகவிற்கு ஓட்டு செல்லாது என சொல்கின்ற கட்சியிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேளுங்கள். அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் எம்பிக்கள் டெல்லிக்கு போய் யாரிடம் மனு கொடுப்பார்கள்? பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு மனுவை பார்த்துக் கொண்டிருப்பார்களா? பாஜகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு. 

கோவையில் மட்டுமின்றி பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பப்பட்டாலும், ஒரு மாநில தலைவராக தனக்கு பல்வேறு கடமைகள் இருக்கின்றன. தனக்குள்ள வேலை மற்றும் சங்கடங்கள் என அனைத்தையும் தேசிய தலைமை இடம் சொல்லி இருக்கும் சூழலில் இதையும் மீறி தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்தார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பொதுக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, ஆ. ராசா குறித்து நான் வெளியிட்ட 2 ஜி ஆடியோவை அவர் மறுக்கட்டும் நான் அரசியலை விட்டே விலகுகிறேன். ஆ ராசா பிரதமரை குறித்து மேடையில் பேசியவற்றை கண்டு மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர்.

இதை பேசுவதற்கு எந்தவித தார்மீக தகுதியும் அவர்களுக்கு இல்லை என்றும் சாடினார்.

மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் நீங்களும் ஒரே விமானத்தில் வந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு, அவர் வந்தது தனக்கு தெரியாது என்றும் அதற்கும் எனக்கும் எந்தவித முடிச்சும் போட்டு விடாதீர்கள் என்றும் நகைப்புடன் தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *